சுடச்சுட

  

  திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட சுடுகாட்டுக்குச் செல்வதற்கு போதிய சாலை இல்லாத காரணத்தினால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

  திருத்தணி, பழைய சென்னை சாலையில் நந்தியாறு உயர்மட்டப் பாலம் அருகே நகராட்சிக்கு சொந்தமான சுடுகாடு உள்ளது. இந்தச் சுடுகாட்டை, காந்தி நகர், ஜோதிசாமி தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, முருகப்பநகர், கச்சேரி தெரு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட தெரு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சுடுகாட்டுக்குச் செல்வதற்கு போதிய சாலை வசதி இல்லை. அதே போல், சுடுகாடு முழுவதும் முட்புதராக உள்ளதால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

  எனவே சுடுகாட்டுக்குச் செல்லும் சாலை உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai