Enable Javscript for better performance
பயன்பாட்டிற்கு வராத நியாயவிலைக் கடை- Dinamani

சுடச்சுட

    

    திருத்தணி ஒன்றியத்துக்கு உள்பட்ட அகூர் குடியிருப்பு நியாயவிலைக் கடை தொடங்கப்பட்டு 2 மாதங்களாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த நியாயவிலைக் கடையை அரக்கோணம் மக்களவை உறுப்பினர் கோ. அரி அண்மையில் திறந்து வைத்தார்.

    அகூர் குடியிருப்புப் பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த குடியிருப்புப் பகுதியில் ரூ. 2.75 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு புதிய நியாயவிலைக் கடை கட்டடம் கட்டடப்பட்டது.

    நீண்ட நாள்களாக திறக்கப்படாமல் இருந்த இந்த நியாயவிலைக் கடையை அரக்கோணம் மக்களவை உறுப்பினர் கோ. அரி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். ஆனால் இதுவரை இந்த நியாயவிலைக் கடை பயன்பாட்டிற்கு வரவில்லை.

    இதனால் அகூர் குடியிருப்பு மக்கள், 2 கி.மீ தொலைவில் உள்ள அகூர் கிராமத்துக்குச் சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வருகின்றனர்.

    அகூர் குடியிருப்பு மக்களின் இந்த நிலையைக் கருத்தில் கொண்டு இந்தக் குடியிருப்புப் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையை உடனடியாகத் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai