சுடச்சுட

  

  பூந்தமல்லியில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

  By பூந்தமல்லி  |   Published on : 25th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பூந்தமல்லி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்களில் இருந்து தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

  பூந்தமல்லி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 40 மைக்ரான்களுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  இதனால், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சாமுவேல், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் இந்திராகாந்தி, மாசுக் கட்டுப்பாடு வாரிய பொறியாளர் ரகு உள்ளிட்ட அதிகாரிகள் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

  அதில் கடைகள், உணவங்களில் இருந்து 1 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்தவர்களுக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

  மாங்காடு பேரூராட்சியில்....

  இதேபோல் மாங்காடு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மாங்காடு பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

  அதில், உணவகம், கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 40 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  இதுகுறித்து மாங்காடு பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் கூறியாதவது:

  கோயில் பகுதியான மாங்காடு பேரூராட்சியில் 40 மைக்ரான்களுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வாரம் தோறும் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.

  திருத்தணியில்...

  திருத்தணி, திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட 200 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள், டம்ளர்களை நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

  திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

  இதையடுத்து மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உதவிப் பொறியாளர் ரகுநாதன், திருத்தணி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சண்முகம், சுகாதார ஆய்வாளர் சதீஷ், நகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை கடைகளில் சோதனை நடத்தினர்.

  அதில், அரக்கோணம் சாலை, ம.பொ.சி.சாலை, சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் பிளாஸ்டிக் விற்பனை செய்யும் கடைகள், காய்கறி கடைகள் ஆகியவற்றில் இருந்து 200 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai