சுடச்சுட

    

    பொன்னேரி அருகே புதன்கிழமை இரவு ஆட்டோவும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.

    தச்சூர் அருகே உள்ள ஆண்டார்குப்பத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஒன்று பொன்னேரி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ஆட்டோ, மாதவரம் முஸ்லிம் நகர் அருகே வந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் பாபு, உப்பளம் கிராமத்தைச் சேர்ந்த லதா (42), மாலா (30), பரிக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா (38), பூங்கொடி (39), கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த லட்சுமி (30) ஆகியோர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தயாளன் (45), துரைவேல்(60) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து பொன்னேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai