சுடச்சுட

    

    போக்குவரத்துக்கு இடையூறாகத் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

    By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 25th September 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகத் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    கும்மிடிப்பூண்டி சந்தையில் உள்ள காய்கறி கடைகள், பழக்கடைகள், மளிகைக் கடை ஆகியவற்றில் இருந்து வீசப்படும் பொருட்களை உண்பதற்காக சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

    குறிப்பாக, இரவு நேரங்களில் இந்த மாடுகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்களைச் சந்திக்கின்றனர்.

    இந்நிலையில், கடந்த 28.8.2014 அன்று நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி சந்தையில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பேரூராட்சி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் சுற்றித் திரிந்த 15 மாடுகளைப் பிடித்தனர். இதுதொடர்பாக அந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்தனர்.

    இதுபோன்ற நடவடிக்கையை கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தொடர்ந்து கடைப்பிடிக்க எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai