சுடச்சுட

  

  திருவள்ளூர் மாவட்டத்தில் போலி மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குற்றவியல் தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் சரவணன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

  திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட கடம்பத்தூரை அடுத்த புதுமாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் தினகரன் (34), ராமதண்டலம் காந்தி நகரைச் சேர்ந்த பரமசிவம் மனைவி மல்லிகா (50), கருணா என்பவரது மனைவி காஞ்சனா (40) ஆகிய மூன்று பேரும் போலி மது விற்பனை செய்யப்பட்டதற்காக கடந்த 18, 19-ஆம் தேதிகளில் கைது செய்யப்பட்டனர்.

  இவர்கள் 3 பேரையும் குற்றவியல் தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் அடைக்குமாறு மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் புகழ், திருவள்ளூர் துணை ஆட்சியர் ராகுல்நாதிடம் பரிந்துரைத்தார்.

  இதன் அடிப்படையில் தினகரன், காஞ்சனா மற்றும் மல்லிகா ஆகிய பேரையும் நன்னடத்தை சான்றினை மீறியதற்காக குற்றவியல் தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் 6 மாதங்கள் சிறையில் அடைக்க துணை ஆட்சியர் ராகுல்நாத், உத்தரவிட்டார்.

  இதையடுத்து அவர்கள் 3 பேரும் சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai