சுடச்சுட

    

    மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 380 மனுக்கள்

    By திருவள்ளூர்  |   Published on : 25th September 2014 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 380 மனுக்கள் வரப்பெற்றன.

    இந்தக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

    அதில் முதியோர், விதவை உதவித்தொகைக் கோரி 39 மனுக்கள், வீட்டு மனைப் பட்டா கோரி 71 மனுக்கள், மாற்றுத் திறனாளிகள் இலவச வீட்டுமனைப் பட்டா கோரி 160 மனுக்கள், வேலை வாய்ப்புக் கோரி 15 மனுக்கள், குடும்ப அட்டை வழங்கக் கோரி 5 மனுக்கள், பல்வேறு உதவிகள் கோரி 90 மனுக்கள் உள்பட மொத்தம் 380 மனுக்கள் அளிக்கப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

    இந்தக் கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் பரந்தாமன், அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai