மதுபான விடுதிகள், டாஸ்மாக் கடையில் திருட்டு
By கும்மிடிப்பூண்டி, | Published on : 25th September 2014 12:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் டாஸ்மாக் கடை, அதனை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள 2 மதுபான விடுதிகளில் இருந்து பணம், மது பாட்டில்களை மர்ம நபர்கள் புதன்கிழமை அதிகாலை திருடிச் சென்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் மாதர்பாக்கம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை, இந்த கடையை ஒட்டியுள்ள மதுபான விடுதி ஆகியவற்றுக்குள் மர்ம நபர்கள் புதன்கிழமை அதிகாலை புகுந்தனர்.
டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 6,800, மதுபாட்டில்களையும் திருடிச் சென்றனர். இதையடுத்து மதுபான விடுதியில் இருந்து ரூ. 6,000 திருடப்பட்டது. இக் கடையில் கடந்த 7 நாட்களில் இரண்டாவது முறையாக திருட்டு நடைபெற்றுள்ளது.
சிப்காட்டில்...
இதனிடையே, சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள மதுபான விடுதியின் மேற்கூரையை உடைத்து அந்த மதுபான விடுதியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 8,000 மற்றும் ரூ.1,000 மதிப்புள்ள பொருள்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இந்த இரு சம்பவங்கள் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.