சுடச்சுட

    

    ராஜபட்சவை கண்டித்துவீடுகளில் கருப்புக் கொடி: திமுக பிரசாரம்

    By திருவள்ளூர்,  |   Published on : 25th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை அதிபர் ராஜபட்ச ஐ.நா. சபையில் பங்கேற்பதைக் கண்டித்து கலாம்பாக்கம் கிராமத்தில் உள்ள வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும்படி திமுக சார்பில் புதன்கிழமை பிரசாரம் செய்யப்பட்டது.

    திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கலாம்பாக்கம் கிராமத்தில் திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் திமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர் இந்தப் பிரசாரத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

    பிறகு அந்த கிராமத்தில் வீடு வீடாகச் சென்று, இலங்கை அதிபர் ராஜபட்ச ஐ.நா. சபையில் பங்கேற்பதைக் கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றவும், கருப்புச் சட்டை அணியவும் வலியுறுத்தினர். இதில், திமுக நிர்வாகிகள் சீனிவாசன், மகாலிங்கம், ஜெயபாரதி, தினகரன், ராஜா, ஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai