சுடச்சுட

    

    ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு கடத்தி வரப்பட்ட ஷேர் ஆட்டோவை போலீஸார் செவ்வாய்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கூட்டுச் சாலையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது ஆட்டோவில் இருந்த இருவர், போலீஸாரிடம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த இருவரையும், போலீஸார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தபோது அவர்கள் சென்னை, எண்ணூர் பகுதியைச் சேர்ந்த பாபு மகன் அரசுராஜ் என்கிற அப்பு (23), பட்டாபிராமன் மகன் அருண் (25) என தெரியவந்தது. மேலும் அந்த ஆட்டோவை ஆந்திர மாநிலம் தடா பகுதியில் இருந்து திருடி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai