சுடச்சுட

  

  திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி வருவாய்த் துறை என்ற "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  மக்களைத் தேடி வருவாய்த் துறை என்ற "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை காலை மாவட்டத்தில் உள்ள வட்டங்களில், அந்தப் பகுதி வட்டாச்சியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

  திருவள்ளூர் வட்டத்தில், புல்லரம்பாக்கம் கிராமத்துக்கு, புல்லரம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்திலும், பூந்தமல்லி வட்டத்தில் சுந்தரசோழவரம் கிராமத்துக்கு அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி

  வளாகத்திலும், பொன்னேரி வட்டத்தின் ஆலாடு-2 கிராமத்துக்கு அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்திலும் "அம்மா' திட்ட முகாம் நடைபெறும்.

  கும்மிடிப்பூண்டி வட்டத்தின் ஆரம்பாக்கம்-1 கிராமத்துக்கு ஆரம்பாக்கம் பஞ்சாயத்து அலுவலக வளாகத்திலும், திருத்தணி வட்டத்தின் இலுப்பூர் கிராமத்துக்கு அப்பகுதி கிராம நிர்வாக அலுவலகத்திலும், பள்ளிப்பட்டு வட்டத்தின் காக்களுர் கிராமத்துக்கு அப்பகுதி கிராம நிர்வாக அலுவலகத்திலும் "அம்மா' திட்ட முகாம் நடைபெறும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai