சுடச்சுட

  

  பொன்னேரி ரயில் நிலைய சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 70-க்கும் மேற்பட்ட குடிசைகளை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை அகற்றினர். இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  பொன்னேரி ரயில் நிலைய சாலையில் அமைந்துள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை ஒட்டியுள்ள சுவர், அந்தச் சாலை ஓரத்தில் 80-க்கும் மேற்பட்டோர் கடந்த 40-ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.

  இந்தக் குடிசைகளை அகற்றுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் பொன்னேரி ரயில் நிலைய சாலையில் அமைக்கப்பட்டுள்ள குடிசைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

  இதையடுத்து கடந்த புதன்கிழமைக்குள் இந்தக் குடிசைகளை அகற்ற அப்பகுதி மக்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. மேலும் அகற்றப்படும் குடிசைகளில் குடியிருப்பவர்களுக்கு பொன்னேரி-பழவேற்காடு சாலையில் உள்ள வஞ்சிவாக்கம் பகுதியில் மாற்று இடத்தை வருவாய்த்துறை தேர்வு செய்தனர்.

  ஆனால், நகரில் இருந்து 8 கி.மீ தூரமுள்ள வஞ்சிவாக்கம் பகுதியில் மாற்று இடம் அளித்தால் பிள்ளைகளின் படிப்பு, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே பொன்னேரி பேரூராட்சி எல்லைக்குள் மாற்று இடம் அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வருவாய்த்துறையினரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

  இதனை ஏற்க மறுத்த வருவாய்த் துறையினர், பொன்னேரி கோட்டாட்சியர் மனுவேல்ராஜ் தலைமையில், ரயில் நிலைய சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த குடிசைகளை வியாழக்கிழமை அகற்றினர்.

  இதைக் கண்டித்து பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  இத்தகவல் அறிந்த போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

  இதையடுத்து பொன்னேரி டி.எஸ்.பி எட்வர்ட் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாரின் உதவியுடன், குடிசைகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai