சுடச்சுட

    

    செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையம் கோஜன் மேலாண்மை, பொறியியல் கல்லூரியில் மின் அறிவியல், தொடர்பியல் துறை சார்பில் 5ஆவது தேசிய ஆய்வு அரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் பாபு தலைமை வகித்தார். துறைத் தலைவர் கோகிலா வரவேற்றார்.

    இதில் ஸ்ரீ அரிகோட்டாவில் உள்ள இந்திய வானிலை மைய சுற்றுச் சூழல், வனத்துறை ஆராய்ச்சியாளர் முனைவர் அமிதவ்முகண்டி கலந்து கொண்டு சிறப்பு மலரை வெளியிட்டார்.

    கல்லூரியின் துணைத் தலைவர் விஸ்வநாதன், துணை முதல்வர் வெங்கடேசன், துறையின் துணைத் தலைவர் ராமதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

    கல்லூரி பேரவைத் தலைவர் சாம், மாணவர் உதயகுமார் நன்றி கூறினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி ஒருங்கிணைப்பாளர் லோகஸ்ரீ பிரபு செய்திருந்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai