Enable Javscript for better performance
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி

    By திருவள்ளூர்,  |   Published on : 26th September 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் விளக்கும் புகைப்படக் கண்காட்சி ஈக்காட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சியை பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.வி.ரமணா பேசியதாவது:

    தமிழக முதல்வர் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு துறையின் மூலமாக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    இத்திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இதுபோன்ற கண்காட்சி அவசியம். இதில் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு புகைப்படங்களின் மூலமாக விளக்கப்பட்டுள்ளது.

    எனவே இந்தக் கண்காட்சியை பொது மக்கள் பார்த்து பயனடைய வேண்டும் என்றார்.

    இதில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ், பூந்தமல்லி எம்எல்ஏ மணிமாறன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவர் புட்லூர் ஆர்.சந்திரசேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், உதவி அலுவலர்கள் தேவராஜ், அஸ்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai