சுடச்சுட

    

    பக்ருதீன் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

    By பூந்தமல்லி  |   Published on : 26th September 2014 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     தமிழகத்தில் இந்து தலைவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் பக்ருதீன், பிளால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய 3 தீவிரவாதிகள், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர் படுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து தலைவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆந்திரத்தின் புத்தூரில் பதுங்கியிருந்த போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிளால் மாலிக் ஆகிய 3 தீவிரவாதிகளை, சி.பி.சி.ஐ.டி போலீஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த 3 தீவிரவாதிகள் மீது வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த் ரெட்டி, சேலம் ஆடிட்டர் ரமேஷ், குடியாத்தம் நகைக் கடை அதிபர் பஞ்சாட்சரம் ஆகியோர் கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட 8 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இந்த வழக்குகள் அனைத்தும் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு அண்மையில் மாற்றப்பட்டன.

    வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த் ரெட்டி, பஞ்சாட்சரம் ஆகியோர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணைக்காக தீவிரவாதிகள் 3 பேரும் தனித் தனி வாகனங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறப்பு நீதிóமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இதில், வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் அக்டோபர் 1-ஆம் தேதி வரையும், குடியாத்தம் நகை கடை அதிபர் பஞ்சாட்சரம் கொலை வழக்கில் அக்டோபர் 9-ஆம் தேதி வரையும் நீதி மன்றக் காவலில் வைக்க நீதிபதி மோனி உத்தரவிட்டார்.

    மேலும் அடுத்த வாரத்துக்குள் இந்த கொலை வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகை நகலை சமர்பிக்கமாறு நீதிபதி மோனி உத்தரவிட்டார். இதையடுத்து 3 தீவிரவாதிகளும் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai