சுடச்சுட

    

    பாகிஸ்தான் உளவாளிகள் 5 பேருக்கு காவல் நீட்டிப்பு

    By பூந்தமல்லி,  |   Published on : 26th September 2014 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாகிஸ்தான் உளவாளிகள் அருண் செல்வராஜ் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 9-ஆம் தேதி வரை நீட்டித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

    தமிழகத்தை உளவு பார்த்தாக பாகிஸ்தான் உளவாளிகள் ஜாகீர் உசேன், முகமது சலீம், ரபீக், சிவபாலன் ஆகிய 4 பேரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ) சென்னையில் கடந்த ஆண்டு கைது செய்தனர்.

    இதேபோல் மற்றொரு பாகிஸ்தான் உளவாளியான அருண் செல்வராஜை, சென்னை விமான நிலையத்தில் கடந்த 10-ஆம் தேதி தேசியப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இவர்கள் 5 பேரின் நீதிமன்றக் காவல் வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது.

    இதனால், 5 பேரும் புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இவர்கள் 5 பேரின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 9-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி மோனி உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர்கள் 5 பேரும் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai