சுடச்சுட

    

    பிளஸ் 2 தனித் தேர்வு தொடக்கம்:மாவட்டக் கல்வி அலுவலர் ஆய்வு

    By திருத்தணி,  |   Published on : 26th September 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தனித் தேர்வை மாவட்டக் கல்வி அலுவலர் டி.மலர்விழி ஆய்வு மேற்கொண்டார்.

    பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான தனித் தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது.

    திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ் முதல் தாள் தேர்வை மாவட்டக் கல்வி அலுவலர் டி.மலர்விழி ஆய்வு மேற்கொண்டார்.

    இதையடுத்து கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி, பொதட்டூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற தேர்வுகளையும் மாவட்டக் கல்வி அலுவலர் மலர்விழி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் முருகேஷ் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் உடனிருந்தனர்.

    இந்தத் தனித் தேர்வுகள் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai