சுடச்சுட

  

  கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட சந்தைப் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 80 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பேரூராட்சி ஊழியர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

  திருவள்ளூர் மாவட்டத்தில் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், பேரூராட்சி நிர்வாகங்களுக்கு புதன்கிழமை உத்தரவிட்டார்.

  இதையடுத்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் கோ.மணிவேல் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள், சந்தைப் பகுதியில் உள்ள கடைகளில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

  அதில், 80 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai