சுடச்சுட

    

    மத்திய அரசின் திட்டங்கள்: நாளை முதல் புகைப்படக் கண்காட்சி

    By திருவள்ளூர்,  |   Published on : 26th September 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்கள் கருத்தொளி இயக்கம் சார்பில் சனிக்கிழமை முதல் வரும் 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) வரை மத்திய அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் பிரசாத் அளித்த பேட்டி:

    மக்கள் கருத்தொளி இயக்கத்தை நடத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு ஊடகப் பிரிவுகள், மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து கருத்தொளி இயக்கத்தினை நடத்தி வருகிறது.

    இந்த ஆண்டு தமிழகத்திலேயே முதன் முதலாக திருவள்ளூரில் சனிக்கிழமை முதல் வரும் 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) வரை மக்கள் கருத்தொளி கண்காட்சி இயக்கம் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

    இக்கண்காட்சியில், அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டு தகவல்களையும், நடைமுறைகளையும் மக்களுக்கு எடுத்துரைத்தல், அரசின் திட்டங்கள் தொடர்பாகவும், உள்ளூர் நலன் சார்ந்த முக்கிய விஷயங்கள் குறித்தும் கருத்தரங்குகள் நடத்துதல், மத்திய அரசின் நலத்திட்டங்களில் பயன்பெற்றவர்களின் அனுபவங்களை ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துதல் உள்ளிட்டவை நடைபெறும்.

    இதில் இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் பிரதமர் மக்கள் நிதித் திட்டம் (ஜன்தன் திட்டம்), நவீன நகரத் திட்டம், ஸ்வலம்பன் திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம், அனைவருக்கும் கல்வி, பிரதமரின் சிறுபான்மையினர் நலத்திட்டம், கல்வி பெறும் உரிமைச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற திட்டங்கள் குறித்தும் விளக்கப்படும்.

    கண்காட்சியில் நாள்தோறும் கருத்தரங்கம், விவாத அரங்கம், மகளிர், மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், திரைப்படக் காட்சிகள் ஆகியவை ஒளிபரப்பப்படும்.

    இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றார் பிரசாத்.

    பேட்டியின்போது, ஊடக தகவல் அலுவலர் சண்முகம், முன்னோடி வங்கி மேலாளர் சுரேஷ், மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai