சுடச்சுட

    

    திருவள்ளூர் அருகே வயலில் வைக்கப்பட்டிருந்த மின்சார மோட்டாரை திருடிய 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    திருவள்ளூரை அடுத்த கொப்பூரைச் சேர்ந்த பூபதியின் மகன் கண்ணதாசன். இவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரது வயலில் வைக்கப்பட்டிருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள மின்சார மோட்டார் திருடு போனது.

    இதுகுறித்து கண்ணதாசன் அளித்த புகாரின் பேரில் மணவாளநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மணவாளநகர் பகுதியில் உள்ள பழைய பொருள்களை வாங்கும் கடையில் கண்ணதாசனின் மின்சார மோட்டார் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீஸார் அங்கு சென்று மோட்டாரை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் கொப்பூர் பகுதியைச் சேர்ந்த முருகனின் மகன் ராஜா (19), மோகனின் மகன் ஜெயக்குமார் (19) ஆகிய இருவரும் அந்த மோட்டாரைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ராஜா, ஜெயக்குமார் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai