சுடச்சுட

    

    ராஜபட்சவுக்கு எதிர்ப்பு:திமுகவினர் கருப்புச் சட்டை ஆர்ப்பாட்டம்

    By திருவள்ளூர்,  |   Published on : 26th September 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஐ.நா. சபையில் இலங்கை அதிபர் ராஜபட்ச பங்கேற்று உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட திமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் சுதர்சனம் தலைமை வகித்தார். இதில், முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, தி. ராசகுமார், பொன்.பாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    ராஜபட்சவைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ள கடைகள், வாகன ஓட்டிகளிடம் இதுதொடர்பான துண்டுப் பிரசுரங்களை திமுகவினர் விநியோகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் வழக்குரைஞர் எஸ்.கே.ஆதாம், ரவி, நந்தகுமார், ஜெய்கிருஷ்ணா, புவனேஷ்குமார், செல்வகுமார், போளிவாக்கம் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதுமுள்ள திமுகவினர் அந்தந்த பகுதிகளில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், கருப்புச் சட்டை அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai