சுடச்சுட

  

  திருவள்ளூர் அருகே காப்புக் காட்டில் சோதனைக்குச் சென்ற வன அலுவலரைத் தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

  திருவள்ளூரை வட்டத்துக்கு உள்பட்ட பூண்டி காப்புக் காட்டில் மர்ம நபர்கள் செம்மரக் கட்டைகளை வெட்டுவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

  இதையடுத்து வனச்சரக அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, வெஸ்லி, சுரேஷ்பாபு, வனக் காவலர்கள் கொண்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை இரவு காப்புக் காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது வனப்பகுதியில் மரத்தை வெட்டிக் கொண்டிருந்த மர்மக் கும்பலை வனத்துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது அந்த மர்மக் கும்பல், வனத்துறையினர் மீது கத்தியை கொண்டு தாக்குதல் நடத்தினர்.

  அதில் வன அலுவலர் சுரேஷுக்கு (35) காயம் ஏற்பட்டது. இதையடுத்து சுரேஷ், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். புல்லரம்பாக்கத்தை அடுத்த பூதூர் கிராமத்தைச் சேர்ந்த முனிவேல் என்பவரை வனத்துறையினர் கைது அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai