சுடச்சுட

    

    ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவியேற்பு

    By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 27th September 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஏடூர், ஏ.என்.குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

    கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஏ.பி.விஜயன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்நிலையில், ஏடூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் விஜயன் பதவியேற்றுக் கொண்டார்.

    கும்மிடிப்பூண்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கே. அற்புதராஜ் முன்னிலை வகித்தார்.

    துணைத் தலைவர் ஜெகதீசன், ஊராட்சி செயலாளர் சோபன்பாபு, ஒன்றியக் கவுன்சிலர் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் ஏ.என்.குப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகா செல்வம் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai