சுடச்சுட

    

    ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: முன்னாள் எம்எல்ஏவின் மகன் கைது

    By திருவள்ளூர்,  |   Published on : 27th September 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் அருகே ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏவின் மகனை போலீஸார் விரட்டிப் பிடித்தனர்.

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் அருகே உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் யூனியன் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த மையத்துக்குள் உள்ள இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர் சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு உடைக்க முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸார் இந்த சத்தத்தைக் கேட்டு ஏடிஎம் மையம் அருகே சென்ற பார்த்தனர். போலீஸாரைக் கண்ட அந்த மர்ம நபர் தப்பி ஓடினார்.

    இதையடுத்து காவலர் பாஸ்கர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தினேஷ் குமார் ஆகியோர் துரத்திச் சென்று அந்த மர்ம நபரை பிடித்தனர். பிறகு அவரை, மணவாளநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் மணவாளநகர், கபிலர் நகரைச் சேர்ந்த நடராஜனின் மகன் மகேந்திரன் (47) என்பது தெரியவந்ததது. இதையடுத்து மகேந்திரனை போலீஸார் கைது செய்தனர்.

    மகேந்திரனின் தந்தை நடராஜன் கடந்த 1989-ஆம் ஆண்டு, திமுக சார்பில் திருத்தணி தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது அவர் அதிமுகவில் உள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai