சுடச்சுட

    

    சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரம் விநியோகம்

    By திருத்தணி,  |   Published on : 27th September 2014 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் ஓட்டுநர், பயணிகள், கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

    திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை சார்பில், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பயணிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு சாலை விதிகள், சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருத்தணி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருத்தணி போக்குவரத்து பணிமனையின் கிளை மேலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். போக்குரவத்து துறை பொது மேலாளர் சாத்தலிங்கம், கோட்ட மேலாளர் வேள்விகாத்தபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai