Enable Javscript for better performance
\\\"ஜாதி சான்றிதழ் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "ஜாதி சான்றிதழ் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்'

    By திருவள்ளூர்,  |   Published on : 27th September 2014 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர்கள் எளிய முறையில் ஜாதிச் சான்றிதழைப் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அதைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கொ. வீரரகாவ ராவ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட திட்டக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பா.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

    இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் பேசியதாவது:

    கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களின் நலன் கருதி அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வித் துறையில் எந்த தேக்கமும், தொய்வும் ஏற்படக் கூடாது என்பதில் அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது.

    மாணவ, மாணவியர்களுக்கு எளிய முறையில் ஜாதிச் சான்றிதழ் பெறுவதில் சட்டத் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் ஜாதிச் சான்றிதழை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.

    இந்தக் கூட்டத்தில் கல்வி, வேளாண்மை, சுகாதாரம், போக்குவரத்து, ஊரக வளர்ச்சி, தோட்டக்கலை, கால்நடைப் பராமரிப்பு, பொதுப்பணி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று தங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.

    இதில், மாவட்ட ஊராட்சி செயலாளர் மைதிலி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் லட்சுமணன், திட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai