சுடச்சுட

    

    சாதி, வருமானம், இருப்பிடச் சான்று போன்ற சான்றுகள் வழங்காததைக் கண்டித்து 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருத்தணி தாலுக்கா அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருத்தணி தாலுக்கா அலுவலகத்தில் சாதி, இருப்பிடம், வருமானம் ஆகிய சான்றுகள் கோரி பலர் தாலுக்கா அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.

    ஆனால், நீண்ட நாள்கள் ஆகியும் மனுதாரர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வருவாய்த்துறையினர் வழங்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் விரைவில் சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறையினர் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

    இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த 1-ஆம் தேதியில் இருந்து ஆன் லைன் மூலம் சான்றுகள் வழங்குவதால், நேரில் சான்றிதழ்கள் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது.

    இனிவரும் நாட்களில் சான்றுகள் உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai