Enable Javscript for better performance
திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்- Dinamani

சுடச்சுட

    

    திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

    By திருத்தணி,  |   Published on : 27th September 2014 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்டவற்றுக்கான சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து, திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜாதி, இருப்பிடம், வருமானம், முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு சான்றிதழ்கள் வழங்கக் கோரி கடந்த 1-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை 400-க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்திருந்தனர்.

    அவர்களுக்கு இதுவரை மேற்கண்ட சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த

    20-க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை திரண்டு வந்தனர். அங்கு அவர்கள், அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, ""சான்றிதழ்களை விரைந்து வழங்க வேண்டும் என்பதற்காகவே செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து "ஆன்லைன்' மூலம் சான்றுகள் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், கணினியில் ஏற்பட்ட "நெட்வொர்க்' பிரச்னையால் உரிய நேரத்தில் சான்றிதழ்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பிரச்னை சீர் செய்யப்பட்டு வருகிறது.

    இனிவரும் நாள்களில் சான்றிதழ்கள் உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால், சமாதானம் அடைந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பொதுமக்களின் திடீர் ஆப்பாட்டத்தால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai