Enable Javscript for better performance
தோக்கமூரில் \\\"அம்மா\\\' திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கமூர் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமில் 38 மனுக்கள் பெறப்பட்டன.

    கும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கமூர் ஊராட்சியில் வருவாய் துறையினரின் "அம்மா' திட்ட முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

    ஊராட்சி மன்றத் தலைவர் சரோஜா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஈஸ்வரி பழனி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் மூர்த்தி வரவேற்றார்.

    இதில், முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை திருத்தம் போன்ற 38 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அதில் 18 மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டது.

    தனி வட்டாட்சியர் செல்வம், வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai