Enable Javscript for better performance
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை - Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் மாவட்டத்தில் 278 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகரன் வியாழக்கிழமை வழங்கினார்.

    தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஆசிரியர் தேர்வு வாரியம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையதளம் மூலம் கடந்த 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் கலந்தாய்வு நடத்தியது.

    இதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை கடந்த 25-ம் தேதி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதில் முத்திரையும், கையொப்பமும் இட்டு பணி நாடுநர்களுக்கு வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பணி நாடுநர்கள் 278 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகரன் பணி நியமன ஆணையை வழங்கினார்.

    இதில் தமிழ் ஆசிரியர்கள் 24 பேர், ஆங்கில ஆசிரியர்கள் 58 பேர், கணித ஆசிரியர்கள் 20 பேர், அறிவியல் ஆசிரியர்கள் 39 பேர், சமூக அறிவியல் ஆசிரியர்கள் 137 பேர் என மொத்தம் 278 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    தொடக்கக் கல்வி அலுவலகத்தில் 10 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அறிவழகன், திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலர் மலர்க்கொடி, பொன்னேரி மாவட்டக் கல்வி அலுவவலர் சுவாமிநாதன், பள்ளிகளின் துணை ஆய்வாளர்கள் ராமமூர்த்தி, கதிரேசன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணி

    உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai