Enable Javscript for better performance
புழல் சிறையில் 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: 86 பேர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    புழல் சிறையில் 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: 86 பேர் பங்கேற்பு

    By செங்குன்றம்  |   Published on : 27th September 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்குன்றத்தை அடுத்த புழல் சிறையில் நடைபெற்ற 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9 பெண் கைதிகள் உள்பட 86 பேர் எழுதினர்.

    தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் உள்ள கைதிகளுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இந்தத் தேர்வை 4 மத்திய சிறைகளில் உள்ள கைதிகள் எழுதி வருகின்றனர்.

    இதில், புழல், வேலூர், கடலூர் சிறைகளைச் சேர்ந்த 9

    பெண் கைதிகள் உள்பட 86 கைதிகள், புழல் சிறையில் உள்ள மையத்தில் வெள்ளிக்கிழமை

    தேர்வு எழுதினர்.

    தமிழக சிறைத்துறை துணைத் தலைவர் ராஜேந்திரன் தேர்வை தொடங்கி வைத்தார். சிறைக் கண்காணிப்பாளர் அன்பழகன், வளர்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், புதிய எருமைவெட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரலிங்கம், செங்குன்றம் அரசு மகளிர் பள்ளி ஆசிரியை விஜயா ஆகியோர் தேர்வுப் பணியில் ஈடுபட்டனர்.

    இந்தத் தேர்வை தமிழ்நாடு சிறைத்துறை தலைவர் மௌரியா, பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai