Enable Javscript for better performance
போரூரில் 50 பவுன், 50 ஆயிரம் பணம் கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    போரூர் அருகே உள்ள ஒரு வீட்டில் 50 பவுன் நகை, 50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் வியாழக்கிழமை கொள்ளையடித்துச் சென்றனர்.

    போரூர், மங்களா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (36). இவர் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியின் உதவியாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பிரசாத், வியாழக்கிழமை பணிக்குச் சென்றுவிட்டார்.

    பிரசாத்தின் வீட்டில் உள்ளவர்களும் உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்று விட்டனர்.

    இந்நிலையில், பிரசாத் வியாழக்கிழமை இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பிரோவில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பிரசாத் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai