சுடச்சுட

    

    மருந்துக் கடை உரிமை பெயர் மாற்றத்துக்கு லஞ்சம்: துணை இயக்குநர் கைது

    By திருவள்ளூர்,  |   Published on : 27th September 2014 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருந்துக் கடை உரிமைக்கு பெயர் மாற்ற ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலக துணை இயக்குநரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரைச் சேர்ந்தவர் சுதர்சனம். இவர், அப்பகுதியில் ராம்சன், ராகவேந்திரா ஆகிய இரு பெயர்களில் வெவ்வேறு மருந்துக் கடைகளை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுதர்சனம் இறந்து விட்டார்.

    எனவே ராகவேந்திரா மருந்துக் கடையின் உரிமையை சுதர்சனத்தின் மனைவி அனுராதா பெயரிலும், ராம்சன் மருந்துக் கடையின் உரிமையை அனுராதாவின் சகோதரர் சுப்பிரமணியின் பெயரிலும் சட்டப்பூர்வமாக மாற்றுவதற்காக திருவள்ளூரில் உள்ள மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் மனு செய்திருந்தனர்.

    இந்த பெயர் மாற்றத்துக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரத்தை மருந்து கட்டுப்பாட்டு அலுவலக துணை இயக்குநர் விஜயராகவன் லஞ்சமாகக் கேட்டாராம்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் அனுராதா புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் டிஎஸ்பி சிவபாதசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ், தமிழரசி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை அனுராதாவிடம் கொடுத்து, அதை விஜயராகவனிடம் கொடுக்கும்படி கூறினர்.

    பிறகு, விஜயராகவன் லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டாரா என ஒளிந்து நின்று

    கண்காணித்தனர்.

    அனுராதாவிடம் மருந்துக் கட்டுப்பாட்டு துணை இயக்குநர் விஜயராகவன் பணத்தை வாங்கியவுடன் அவரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai