சுடச்சுட

  

  ஸ்ரீபள்ளி கொண்டேஸ்வர ஸ்வாமி கோயிலில் நவராத்திரி விழா

  By ஊத்துக்கோட்டை  |   Published on : 27th September 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த ஆந்திரத்தின் சுருட்டப்பள்ளி ஸ்ரீபள்ளி கொண்டேஸ்வர ஸ்வாமி கோயிலில் நவராத்திரி விழா புதன்கிழமை தொடங்கியது.

  இந்த விழாவையொட்டி நாள்தோறும் மாலை 5 மணி முதல் ஸ்நபன பூஜையும், அதைத் தொடர்ந்து ஸ்ரீமரகதாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகமும், உற்சவ மூர்த்திக்கு சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையோடு கொலு தர்பாரில் உபசாரம் நடைபெற்றது.

  கடந்த புதன்கிழமை, ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அம்பிகை, வியாழக்கிழமை ஸ்ரீகாமட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

  இந்த ஆலங்காரத்துக்கான ஏற்பாடுகளை சென்னையைச் சேர்ந்த பாரதி செய்தார். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினரும், கோயில் செயல் அலுவலர் வெங்கடமுனியும் செய்தனர்.

  வீரராவகவர் கோயிலில்...

  திருவள்ளூர், செப். 26: திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் கோயிலில் கடந்த வியாழக்கிழமை நவராத்திரி உற்சவ விழா தொடங்கியது.

  நவராத்திரியையொட்டி நாள்தோறும் உற்சவர் பெருமாள், கனகவல்லி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும்.

  நாள்தோறும் இரவு உற்சவர் பெருமாள், தாயாருடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோயிலைச் சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

  நவராத்திரியையொட்டி, வரும் அக்டோபர் 3-ஆம் தேதி வரை உற்சவர் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுவார் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai