சுடச்சுட

    

    ஆந்திரத்தில் இருந்து சென்னைக்குக் கடத்த முயன்ற ஒரு டன் செம்மரங்களை காருடன் போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

    ஆந்திரத்தில் இருந்து திருத்தணி வழியாக சென்னைக்கு செம்மரங்கள் கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சனிக்கிழமை அதிகாலை, திருத்தணி குற்றப்பிரிவு ஆணையாளர் ராமமூர்த்தி, போலீஸார் தமிழக- ஆந்திர எல்லையான பொன்பாடி சோதனை சாவடியில் வாகனத் தணிக்கை நடத்தினர்.

    அப்போது நகரியில் இருந்து திருத்தணி நோக்கி கார் வேகமாக வந்து கொண்டிருந்தது.

    சந்தேகத்தின்பேரில் போலீஸார் காரை மடக்கினர். ஆனால் கார் ஓட்டுநர் நிறுத்தாமல் வேகமாகச் சென்றார். தொடர்ந்து காரை போலீஸார் துரத்திச் சென்றார். 4 கி.மீ. துரத்திச் சென்று, மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில் பின்புறத்தில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, காரில் ஓட்டுநர் தப்பி ஓடினர். காரில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள, 17 செம்மரங்கள் இருந்தன.

    இவற்றின் மொத்த எடை ஒரு டன். தொடர்ந்து போலீஸார் கார், செம்மரங்களை திருத்தணி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai