சுடச்சுட

    

    கற்பக விநாயகா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

    By மதுராந்தகம்  |   Published on : 28th September 2014 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுராந்தகம் சின்னகொளப்பாக்கம் கற்பகா விநாயகா பொறியியல் கல்லூரி 9-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

    கல்லூரி மேலாண்மை இயக்குநர் டாக்டர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். இயக்குநர் மீனாட்சி அண்ணாமலை தலைமை தாங்கினார். டாடா கன்சல்டன்சி குழுமத்தின் அங்கீகாரக் குழுத் தலைவர் பட்டாபிராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 450 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களையும், பல்கலைக்கழக தரவரிசையில் முதலிடம் பெற்ற 18 மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி ஆலோசகர் ரவிச்சந்திரன், கல்லூரி முதல்வர் கண்ணன், கற்பக விநாயக மருத்துவக் கல்லூரி டீன் சக்கரவரத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai