Enable Javscript for better performance
காந்தி ஜெயந்தி: டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    காந்தி ஜெயந்தி: டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

    By திருவள்ளூர்,  |   Published on : 28th September 2014 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003-இன்படி இம்மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகள், அதனைச் சார்ந்த மதுபானக் கூட விடுதிகள், எப்எல் 2 (கிளப்புகள்), எப்எல் 3 (ஹோட்டல்கள்), ஹோட்டல்களில் அமைந்துள்ள ஏசி மதுக் கூடங்கள் அனைத்தும் அக்டோபர் 2-ஆம் தேதி மூட வேண்டும்.

    அதை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்

    பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai