சுடச்சுட

    

    தொழிற்சாலையில் 400 லிட்டர் டீசல் திருட்டு: 6 பேர் கைது

    By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 28th September 2014 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 400 லிட்டர் டீசல் திருடிய 6 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் ஜெனரேட்டரை இயக்கவதற்கு வைக்கப்பட்டிருந்த 400 லிட்டர் டீசலை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில் தொழிற்சாலையில் பணிபுரியும் பொன்னேரியைச் சேர்ந்த உதயகுமார் (37), தேர்வழி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (39), சாமிரெட்டி கண்டிகை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் (45), பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மோகன் (55), சாமிரெட்டிகண்டிகை பகுதியைச் சேர்ந்த திவாகர் (19), பெத்திக்குப்பத்தைச் சேர்ந்த ஜெகன் (22) ஆகிய 6 பேர் டீசலை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai