Enable Javscript for better performance
விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி அருகே விவசாயியின் வீட்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடி சென்றனர்.

    வடக்குநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். விவசாயியான இவர், குடும்பத்துடன் சென்னைக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

    இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் தங்கவேலின் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை, ரூ.15 ஆயிரம், வெள்ளிப் பொருள்களை திருடி சென்றனர்.

    இந்த நிலையில் ஊருக்குச் சென்று சனிக்கிழமை காலை வீட்டுக்கு வந்த தங்கவேல் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருந்தது குறித்து அதிர்ச்சி அடைந்து, ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai