சுடச்சுட

    

    குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தை

    By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 29th September 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிறந்த சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை, கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் குப்பைத் தொட்டியில் காணப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள முகாமில் உள்ள குப்பைத் தொட்டியில் வெள்ளிக்கிழமை இரவு குழந்தையின் அழுகுரல் கேட்டதை அடுத்து அப்பகுதி மக்களின் தகவலை அடுத்து சிப்காட் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவ இடத்துக்கு விரைந்த வட்டாட்சியர் பாலுசாமி அந்தப் பகுதி மக்களிடம் இது குறித்து விசாரித்ததோடு அந்த குழந்தையை கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.

    தொடர்ந்து அந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

    இந்த நிலையில் அந்தக் குழந்தை கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த பாலகுண்டராஜா - தெய்வானை தம்பரியரின் குழந்தை என விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் இருவரிடமும் விசாரணை நடத்தி

    வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai