சுடச்சுட

    

    டாஸ்மாக் மதுபானக் கடையில் தீ விபத்து

    By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 29th September 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள தமிழக அரசு மதுபானக் கடையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீயால் ரூ.5 லட்சத்திலான மதுபாட்டில்கள் நாசமாகின.

    தமிழக- ஆந்திர எல்லையில் ஆரம்பாக்கம் பகுதியில் மதுபானக் கடை உள்ளது. சனிக்கிழமை வழக்கம் போல் மேற்பார்வையாளர் ஆறுமுகம், விற்பனையாளர்கள் ராஜா, லிங்கேஸ்வரன் ஆகியோர் கடையைப் பூட்டி வீட்டு வீட்டுக்குச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை அந்த வழியே சென்றவர்கள் பூட்டியிருந்த கடையின் உள்ளே இருந்து புகை வருவதை கண்டு, டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ஆறுமுகத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடம் விரைந்த ஆறுமுகம், ஆரம்பாக்கம் காவல் நிலையம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு நிலையம், வட்டாட்சியர் பாலுசாமி ஆகியோருக்கு தகவல் அளித்தார். தொடர்ந்து தீயணைப்பு அதிகாரிகள் கடையின் கிரில் கேட் கதவைத் திறக்க முயன்றபோது அவர்களால் திறக்க இயலாததால் கடப்பாரையால் உடைத்தும் முடியாமல், ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் கதவை உடைத்தனர்.

    அப்போது கடை முழுக்க புகை மண்டலம் சூழ்ந்தும் கடையில் இருந்த மேசை, மின் விசிறிகள் எரிந்த நிலையிலும் காணப்பட்டது. மேலும் கடையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் சில கருகின. இதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் அந்த மதுபாட்டில்களை பத்திரமாக வேறு அறைக்கு மாற்றினர். புகாரின்பேரில் ஆரம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai