சுடச்சுட

    

     "அம்மா' திட்ட முகாமில், 43 பேருக்கு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணையை வட்டாட்சியர் ரமேஷ் வழங்கினர்.

    திருத்தணி வட்டம், இலுப்பூர் ஊராட்சியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில், வட்டாட்சியர் ரமேஷ், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் லட்சுமணன், வட்ட வழங்கல் அலுவலர் முனியசேகரன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனர். இதில் மொத்தம், 85 மனுக்கள் பெறப்பட்டன. 43 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, அரசின் நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

    மீதமுள்ள 42 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai