Enable Javscript for better performance
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க ஆட்சியரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க ஆட்சியரிடம் மனு

    By திருவள்ளூர்  |   Published on : 30th September 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் அருகே ஆக்கிரமிப்பில் உள்ள 6 ஏக்கர் நிலத்தை மீட்டு அந்தப் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி, சமுதாயக் கூடம் உள்ளிட்டவைகளை கட்ட வேண்டும் என கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    திங்கள்கிழமை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, மதுரவாயல் வட்டத்துக்குள்பட்ட நூம்பல் கிராமத்தைச் சேர்ந்த 8-ஆவது வார்டு உறுப்பினர் ராதா கந்தசாமி தலைமையில் கிராம மக்கள்

    ஆட்சியர் கொ. வீரராகவராவைச்

    சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது: திருவேற்காடு நகராட்சிக்குள்பட்ட நூம்பல் கிராமத்தில் 6.40 ஏக்கர் நிலம் தனியாரின் ஆக்கிரமிப்பில் உள்ளது.

    இந்த நிலத்தை மீட்கக் கோரி பலமுறை மனு அளித்ததன் எதிரொலியாக, அண்மையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது.

    ஆனால் தொடங்கிய நாளன்றே அந்தப் பணி நிறுத்தப்பட்டது.

    எனவே மாவட்ட ஆட்சியர் அந்த அரசு நிலத்தை முழுமையாக மீட்டு அந்தப் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி, சமுதாயக் கூடம், விளையாட்டுத் திடல் உள்ளிட்டவைகளை அமைத்துத் தர வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai