Enable Javscript for better performance
இளைஞரை கத்தியால் குத்தியவர் முள்வேலியில் விழுந்து காயம்- Dinamani

சுடச்சுட

    

    இளைஞரை கத்தியால் குத்தியவர் முள்வேலியில் விழுந்து காயம்

    By திருவள்ளூர்,  |   Published on : 30th September 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் அருகே இரவில் தனியாகச் சுற்றிய மர்ம நபரை பொதுமக்கள் விசாரித்தபோது, அதில் ஒருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர் இரும்பு முள்வேலியில் விழுந்து பலத்த காயங்களுடன் பொதுமக்களிடம் சிக்கினார்.

    திருவள்ளூரை அடுத்த கோவில்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையனின் மகன் கண்ணன் (30). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலரும் சனிக்கிழமை இரவு அந்த கிராமச் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் சந்தேகத்துக்கிடமாக சுற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது அவரை அழைத்து கண்ணனும், அவருடன் இருந்தவர்களும் விசாரித்தனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசிய மர்ம நபர் திடீரென கண்ணனை கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.

    இதையடுத்து மற்றவர்கள் அந்த மர்ம நபரை துரத்திச் சென்றபோது, அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு முள்வேலியில் விழுந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து பொதுமக்கள் அந்த நபரைப் பிடித்து செவ்வாப்பேட்டை போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அந்த மர்ம நபரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது, அவர் வெங்கத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியின் மகன் வெங்கடேசன் (30) என்பதும், திருடுவதற்காக அந்த கிராமத்துக்கு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். இதனிடையே கிராமத்தில் கத்தி குத்துப்பட்ட கண்ணன், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai