சுடச்சுட

  

  ஜெயலலிதாவுக்காக அதிமுகவினர் கூட்டுப் பிரார்த்தனை

  By பூந்தமல்லி  |   Published on : 30th September 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   ஜெயலலிதா வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டியும், கைதானதைக் கண்டித்தும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் திங்கள்கிழமை கூட்டுப் பிரார்த்தனையிலும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

  தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்ததைக் கண்டித்தும், அவர் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டியும், பூந்தமல்லி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மணிமாறன் தலைமையில் பிரார்த்தனை நடந்தது.

  குமணன்சாவடியில் இருந்து ஊர்வலமாக சென்ற அதிமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே உள்ள பனையாத்தம்மன் கோயிலுக்குச் சென்றனர். அங்கு அம்மனை வழிபட்டு, அபிஷேகம் செய்து பிரார்த்தனை நடத்தினர். இதில் பூந்தமல்லி ஒன்றியக் குழுத் தலைவர் திருநாவுக்கரசு, நகரச் செயலாளர் தேவேந்திரன், முன்னாள் நகர மன்றத் தலைவர் பூவை ஞானம், நகர மன்ற உறுப்பினர் தனலட்சுமிகோபிநாத், அரிக்குமார், ஜாகீர்அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  மாங்காட்டில் உண்ணாவிரதம்: மாங்காடு பேருந்து நிறுத்தம் அருகே நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் குன்றத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் பழனி, ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.எம். சுந்தர்ராஜன் உள்பட 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

  பெரியபாளையத்தில்...

  கும்மிடிப்பூண்டி,பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஒன்றிய அதிமுக சார்பில் பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளரும், மாவட்ட ஊராட்சித் தலைவருமான பி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

  எல்லாபுரம் ஒன்றியக் குழுத் தலைவர் அம்மிணி மகேந்திரன், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் குழந்தைவேலு, ஒன்றிய பாசறை பொருளாளர் இ.கே.கோதண்டன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவர் பாஸ்டர் தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் அபிராமன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.

  காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதம், மாலை 5 மணிக்கு முடிவுற்றது.

  போராட்டத்தில், எல்லாபுரம் ஒன்றிய உறுப்பினர்கள் நாகராஜ், முருகன், சுரேஷ், விஜயகுமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பி.எம்.குமார், அமுல் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  பொதட்டூர்பேட்டையில்...

  திருத்தணி, செப். 29: பொதட்டூர்பேட்டையில் 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் உண்ணாவிரம் இருந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

  3-ஆவது நாளாக திங்கள்கிழமை மாவட்ட அவைத் தலைவர் இ.எம். சுவாமிநாதன் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பொதட்டூர்பேட்டையில் நடைபெற்றது.

  பள்ளிப்பட்டு ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் ஜி.முரளி, பொதட்டூர்பேட்டை ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இதில் அரக்கோணம் தொகுதி மக்களவை உறுப்பினர் திருத்தணி கோ.அரி, பள்ளிப்பட்டு மாவட்ட உறுப்பினர் டி.டி.சீனிவாசன், பள்ளிப்பட்டு ஒன்றியக் குழுத் தலைவர் சாந்திபிரியா சுரேஷ் ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

  பொன்னேரியில்...

  பொன்னேரி, பொன்னேரியில் கருப்புப் பட்டை அணிந்த அதிமுகவினர் திங்கள்கிழமை அமைதிப் பேரணி நடத்தினர்.

  பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து கையில் கருப்புக் கொடிகளுடன் கிளம்பிய பேரணி, ஹரிஹரன் பஜார், தேரடித் தெரு, புதிய பேருந்து நிலையம், தாயுமான்செட்டித் தெரு வழியாக சென்று சிவன் கோயில் தெருவில் நிறைவடைந்தது.

  இதையடுத்து சிறையில் இருந்து ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி, அங்குள்ள அகத்தீஸ்வரர் ஆலயம், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிப்பாட்டுத் தலங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.

  பேரணியில், பொன்னேரி எம்.எல்.ஏ. பொன்.ராஜா, மாவட்டச் செயலாளர் சிறுணியம் பலராமன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பரிமேலழகர், மீஞ்சூர் ஒன்றியச்  செயலாளர் மோகன வடிவேல், பொன்னேரி பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி மோகனசுந்தரம், அனுப்பம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சார்லஸ் (எ) உமா மகேஸ்வரன், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திருமுருகன், பொன்னேரி நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளர் செல்வகுமார் கலந்து கொண்டனர்.

  செங்குன்றத்தில்...

  செங்குன்றம், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் அதிமுகவினர் கருப்புக் கொடி ஏந்தியவாறு, சட்டப்பேரவை அலுவலகத்தில் இருந்து நகராட்சி அலுவலகம் வரை பேரணியாகச் சென்று, மறியலில் ஈடுபட்டனர்.

  ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிறுணியம் பலராமன், மாதவரம் 3-ஆவது மண்டலக் குழுத் தலைவர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்தின்போது வடகரை மு.சுந்தர், புள்ளிலைன் தலைவர் சுப்பிரமணி, கருப்புக் கொடி ஏழுமலை, மாணவரணி இணைச் செயலாளர் அப்துல்காதர், வழக்குரைஞர் பிரிவு தமிழரசன், வார்டு உறுப்பினர்கள் கண்ணதாசன், சங்கர், சாந்தி எத்திராஜ், உமா மகேஷ்வரி, ரமணி வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் சாலையில் போக்குவரத்து 2 மணிநேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai