Enable Javscript for better performance
தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய தீர்மானம்- Dinamani

சுடச்சுட

    

    தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய தீர்மானம்

    By திருவள்ளூர்,  |   Published on : 30th September 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுத் துறையில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி பெறும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என அரசு ஊழியர் சங்க 7-ஆவது மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருவள்ளூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில், மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். குழுத் தலைவர் இளங்கோவன் வரவேற்றார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் அருண் டேனியல், மாவட்டச் செயலாளர் காந்திமதிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணிக்காலத்தை வரன்முறை செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம வருவாய் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    வட்டார அளவில் இயங்கி வரும் மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும்.  அரசுத் துறையில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி பெறும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில துணைத் தலைவர் அப்பர் ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டின்போது புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai