சுடச்சுட

  

  பொதுத் தேர்வில் சிறப்பிடம்: ஆதிதிராவிட மாணவர்களுக்குப் பரிசு

  By திருவள்ளூர்,  |   Published on : 30th September 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2014-ஆம் ஆண்டு முடிந்த அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

  ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்வு கூட்டம், ஆட்சியர் கொ. வீரராகவ ராவ், தலைமையில் நடைபெற்றது.

  இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பரவலாக பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.

  அதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகைக் கோரி 10 மனுக்கள், பட்டா கோரி 26 மனுக்கள், வேலை வாய்ப்புக் கோரி 5 மனுக்கள், குடும்ப அட்டை கோரி 4 மனுக்கள், பல்வேறு உதவிகள் கோரி 49 மனுக்கள் உள்பட மொத்தம் 94 மனுக்கள் பெறப்பட்டன.

  பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

  இதைத் தொடர்ந்து கடந்த 2014 மார்ச் மாதத்தில் நடைபெற்ற 10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்குப் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

  இதில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் ரொக்கம், இரண்டாம் பரிசாக ரூ. 30 ஆயிரமும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது.

  இதையடுத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தும் காது கேளாதோருக்கான 3 வயதுக்குள்பட்ட குழந்தைகளைப் பராமரிக்க 5 மாதத்துக்கான செலவினத் தொகையாக ரூ.1.15 லட்சத்துக்கான காசோலையை ஆரம்ப நிலைப் பயிற்சி மைய ஆசிரியர் சசிகலாவிடம் வழங்கினார்.

  இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai