Enable Javscript for better performance
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

    By திருவள்ளூர்,  |   Published on : 17th April 2015 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மப்பேடு கிராமத்தில் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

    திருவள்ளூரை அடுத்த மப்பேடு மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி வசந்தா (49). இருவரும் புதன்கிழமை இரவு வீட்டுக் கதவை உள்பக்கமாகப் பூட்டி விட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.

    நள்ளிரவில் வீட்டின் கதவை கடப்பாறையால் நீக்கி உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வசந்தா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

    திடீரென கண் விழித்த வசந்தா கூச்சலிடவே, அவரது கணவர் எழுந்து வெளியில் வந்து பார்த்தார். அதற்குள் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், மப்பேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai