Enable Javscript for better performance
தொழில் பழகுநர்களுக்கு இன்று சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தொழில் பழகுநர்களுக்கு இன்று சிறப்பு முகாம்

    By திருவள்ளூர்,  |   Published on : 17th April 2015 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஐ.டி.ஐ. படித்த அனைத்து தொழில்பிரிவு பயிற்சியாளர்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அரசினர் தொடர் அறிவுரை மைய எல்லைக்கு உள்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள எம்என்சி, தனியார் நிறுவனங்களில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு, தொழில் பழகுநர்களுக்கான (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் அம்பத்தூரில் உள்ள அரசினர் தொழில்பயிற்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

    திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஐ.டி.ஐ. படித்த அனைத்து தொழில்பிரிவு பயிற்சியாளர்களும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai