Enable Javscript for better performance
பாலியல் தொல்லை:இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

    மாதவரம் வஉசி தெருவைச் சேர்ந்தவர் முகிலன் மனைவி டெய்ஸி (23). அதே பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (28). இவர், கடந்த ஒரு மாதமாக டெய்ஸிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

    கடந்த 14-ஆம் தேதி டெய்ஸி வீட்டுக்குச் சென்ற சதீஷ், கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளார். அப்போது அங்கு முகிலன் வரவே, சதீஷ் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து டெய்ஸி மாதவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சதீஷை கைது செய்து திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai